ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்திற்கு உரிமம் வழங்க முடியாது என்று சென்ற மாதம் மாநில அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனம் தொடுத்த மனு மீதான விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனு மீதான விசாரணை நீதிபதிகள் கவுதம் பட்டேல், எஸ்.ஜி. திகே போன்றோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது.

அப்போது மாநில அரசு சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் பிரேந்திர சரப், உரிமம் இன்றி இயங்கக்கூடிய பைக் டாக்சி சேவையை நிறுத்திய பின் தான் மனு மீதான விசாரணை தொடர வேண்டும் என்று கூறினார். அதன்பின் நீதிபதிகள் உரிமம் இல்லாமல் பைக் டாக்சியை இயக்க ரேபிடோ நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதித்தனர்.

இதற்கிடையில் தடையை மீறி பைக் டாக்சிகளை இயக்கினால் நிரந்தரமாக உரிமம் வழங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து பைக் டாக்சி நிறுவனமும் வரும் 20-ந் தேதி வரை சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உறுதியளித்தது. அடுத்ததாக மனு மீதான விசாரணை 20ம் தேதி நடைபெறவுள்ளது.