விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனி பகுதியில் நாராயணன் என்ற 85 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவரின் மனைவி தான் ஈஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளன. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். தனது மனைவியின் இழப்பு தாங்க முடியாமல் நாராயணன் தவித்து வந்துள்ளார்.அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள ஒரு செருப்பு இடம் தன் மனைவியின் புகைப்படத்தை கொடுத்த இரண்டு லட்சம் செலவு செய்து சிலை ஒன்றை தயார் செய்துள்ளார்.

அந்த சிலைக்கு தன்னுடைய வீட்டில் தினமும் பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரில் உள்ள ஒருவரிடம் சிலிக்கான் ரப்பரில் சிலை தயார் செய்து கொடுக்க கேட்டுள்ளார். அந்த நபர் 14 மாதங்களாக ஈஸ்வரியின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்து கொடுத்த நிலையில் அதற்காக நாராயணன் ஒன்பது லட்சம் செலவு செய்துள்ளார். தற்போது தனது மனைவியின் சிலையை வீட்டிற்கு கொண்டுவந்து வைத்து உறவினர்கள் அனைவரையும் அழைத்து சிறப்பு பூஜை செய்துள்ளார். தத்ரூபமாக அமைக்கப்பட்ட ஈஸ்வரியின் சிலையை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.