
கேரள மாநிலத்தின் வல்லிக்குளங்கரையில் 42 வயதான ஷிஜோ என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாய், அடிக்கடி அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 69 வயதான ஜோசப்பின் வீட்டுக்குள் செல்வதால், இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு ஷிஜோவின் நாய் மீண்டும் ஜோசப்பின் வீட்டுக்குள் நுழைந்ததையடுத்து, இருவரும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சண்டையாக மாறிய நிலையில், ஜோசப், தனது வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் ஷிஜோவை தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.