
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கோவையைச் சேர்ந்த சக்தி என்ற வாலிபருடன் பேசி வந்தார். இந்த நிலையில் சக்தி உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது என கூறி சிறுமியை அழைத்தார்.
முதலில் சிறுமி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து சக்தி வற்புறுத்தியதால் குமரி மாவட்டத்திற்கு வந்தால் நாம் சந்திக்கலாம் என சிறுமி கூறியதாக தெரிகிறது. இதனால் சக்தி தனது நண்பர்களான சந்தோஷ், பரத், தோழிகளான மஞ்சுளா, வளையாபதி ஆகியோருடன் குமரிக்கு சென்று அறை எடுத்து தங்கியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியை வரவழைத்து ஆசை வார்த்தைகள் கூறி கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். மேலும் சிறுமியின் கழுத்தில் கிடந்த 12 கிராம் தங்க சங்கிலியை கழற்றி விற்பனை செய்து அந்த பணத்தை வைத்து ஜாலியாக இருக்கலாம் என நினைத்தனர்.
இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் போலீசார் சிறுமியை மீட்டு பெண்கள் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அவர்கள் கோயம்புத்தூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை வலையில் வீழ்த்தி பாலியல் தொழில் தள்ளியது தெரியவந்தது. இந்த வழக்கில் தப்பியோடிய பரத்தை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.