அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. கூட்டணி குறித்து அமமுக சுதந்திரமாக முடிவெடுக்கும் என்றார்.

அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியது பற்றிய கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி பற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது சரிதான். அதிமுக கட்சியின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான் காரணம். எடப்பாடி பழனிச்சாமியால் தான் திமுக கட்சி தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்றார். மேலும் பாஜக கூட்டணியில் அமுமுக கட்சி இருந்த  நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் கூட்டணியை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கதாகும்.