சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இரவு குடிபோதையில் ஒரு ஜோடி காவல் துறையினரிடம் மிகவும் தகாத முறையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட தம்பதிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லூப் சாலை பகுதியில் ஒரு கார் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர் காருக்குள் இருந்த தம்பதியினரிடம் காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் காரில் இருந்தே கீழே இறங்கி வந்து காரை எடுக்க முடியாது என்று கூறி தகறாறு செய்துள்ளனர். அதாவது அவர்கள் இப்படி எடு அப்படி எடு என்று கூறி கேலியாக பேசி போஸ் கொடுத்ததோடு இப்பவே உதயநிதியை கூப்பிடவா என்று கூறினார். என்னிடம் இப்படி தேவையில்லாமல் கத்தக்கூடாது மூஞ்சிய பாரு என்றெல்லாம் கூறி மிகவும் தகாத முறையில் பேசி உள்ளனர். அதோடு நீங்க வீடியோ எடுக்குறது வெறும் டப்பா போன் தான். நான் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள போன் வைத்துள்ளேன். இன்ஸ்பெக்டரே என்னை பார்த்தால் வணக்கம் போட்டு விட்டு செல்வார்.

அப்படி இருக்கும்போது நீ என்ன அரெஸ்ட் பண்ண போறியா. நாளைக்கு காலைல உன்னுடைய வீட்டு அட்ரஸ் வாங்கி உன்னை காலி பண்ணிடுவேன் என்றெல்லாம் கூறியுள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தம்பதிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணையில் அவருடைய பெயர் சந்திரமோகன் என்பதும் அந்த பெண்ணின் பெயர் தனலட்சுமி என்பதும் அவர்கள் இருவரும் கணவன் மனைவி கிடையாது என்பதும் தெரியவந்துள்ளது.