தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் இன்று பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் பிரச்சாரத்தையும் தொடங்கினார். அவர் பெரம்பூரில் தன் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் கொளத்தூரிலும் பிரச்சாரம் செய்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கொளத்தூரில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சில நிமிடங்கள் மட்டுமே பேசிய விஜய் உடனடியாக அங்கிருந்த புறப்பட்டு சென்றார்.

அதன் பிறகு சரியாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் கொளத்தூரில் நடிகர் விஜயின் வரவேற்பில் குளறுபடிகள் நடந்ததாகவும் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை ரத்து செய்வதாகவும் அறிவித்தார். அதே நேரத்தில் வேறொரு நாளில் தனியாக அவர் பிரச்சாரம் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நடிகர் விஜய் பெரம்பூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு பிரச்சாரம் செய்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவில் ஏப்ரல் 23ஆம் தேதி காலங்காத்தால ரெடியாகிட்டு உங்கள் ஓட்டர் ஐடி கார்டை கையில் எடுத்துவிட்டு முதல் ஆளாக பூத்துல போய் நின்னு உதயசூரியன் சின்னத்துக்கு நேராக பட்டனை அழுத்துங்க என்று சொல்வது போல் இருக்கிறது. ஆனால் அது உண்மை கிடையாது. அவர் விசில் சின்னத்துக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று கூறினார். மேலும் இதனையே சிலர் தவறுதலாக எடிட் செய்து இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள். இது தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.