கிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா கிளாஸ் என்கிற கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் நினைவுக்கு வந்துவிடுவார். உண்மையில் அப்படி ஒருத்தர் இருந்தாரா என்பது பலருக்கும் தெரியாது. சாண்டா கிளாஸ் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுவதுண்டு அதில் ஒன்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

4ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பிஷாப்பான செயின்ட் நிக்கோலஸ் மயிரா என்று அழைக்கப்படும் தற்போதைய டர்க்கியில் தான் வசித்து வந்துள்ளார். அனைவர் மீதும் மிகுந்த அன்புடன் நடந்து கொள்பவராக இருந்த அவருக்கு குழந்தைகள் என்றால் கூடுதல் பிரியம்.

மேலும் அவர் ஒவ்வொருவரின் தேவையை அறிந்து அதற்கேற்றார் போல் தங்க காசுகள், பரிசுகள் போன்றவற்றை கொடுத்து உதவுவார். இவ்வாறு செயின்ட் நிக்கோலஸ் பிரபலமானார். டிசம்பர் 6ஆம் தேதியை செயின்ட் நிக்கோலஸ் நாளாகவே கொண்டாடினர். அன்றைய தினம் அவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் 17 ஆம் நூற்றாண்டில் Dutch நாட்டை சேர்ந்தவர்கள் நியூயார்க்கிற்கு குடி பெயர்ந்தனர். அவர்கள் தங்களுடன் செயின்ட் நிக்கோலஸின் கதையையும் கொண்டு வந்தனர். அந்த சென்ட் நிக்கோலஸ் தான் தற்போது சாண்டா கிளாஸ் ஆக மாறி இருப்பதாக கூறப்படுகிறது.