
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிரிக்கெட் திடல் கட்டுகிறார் அல்லவா ? அதை உடுக்கை மாறியும், விளக்கு கம்பங்களை எல்லாம் சூலம் மாதிரியும், இப்படி கட்ட ஆரம்பிக்கும்போது ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போடு. நாளைக்கு இன்னொரு நாட்டுல… இஸ்லாமிய நாட்டுல அல்லாஹ்வுக் அக்பர் என்று கத்துவான்.
கிறிஸ்தவ நாட்டுல போனா ஓ மை ஜீசஸ், ஓ மை லார்ட் ஜீசஸ் அப்படின்னு கத்துவான். இது எல்லாம் வந்து ரொம்ப கொடுமை. ரொம்ப கொடுமை.. ராமருக்கும், கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? ராமருக்கும், கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
விளையாட்டு, விளையாட்டு தான். விளையாட்டில் இல்லாததெல்லாம் பகைன்னு நீ பார்த்தீங்கன்னா ..உனக்கு பேச அருகதை இருக்கா? நான் எத்தனை தடவை கேட்கிறேன். என்னோட தர்க்கத்துக்கு நேரா வந்து இருக்கலாம், இல்லன்னா… எதிர்த்தாவது பேசி இருக்கலாம்.
இந்த நாடு பிரிட்டிஷ்காரனுக்கு அடிமைப்பட்டு கிடக்கும்போது இந்த நாட்டின் விடுதலைக்கு போராடியவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ்ல இஸ்லாமியர்கள். போராடாதவன் ஆர்.எஸ்.எஸ், பிஜேபில பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் பேசிட்டு இருக்கான்.
உனக்கு ஏதாவது இந்த நாட்டுப்பற்றை பற்றி பேச தகுதி இருக்கா? 400 ஆண்டுகள் எங்களை அடிமைப்படுத்தி ஆண்டு, எங்கள் முன்னோர்களை தூக்கிலிட்டு, சிறைப்படுத்தி, செக்கு இழுக்க வச்சு, கொலை செஞ்சு, கொன்று, அவன் 400 ஆண்டுகள் அடிமைப்படுத்தி ஆண்டவன் உனக்கு நண்பனா இருக்கான், பிரிட்டிஷ்காரன்.
இந்த மண்ணின் விடுதலைக்கு போராடிய பாகிஸ்தான், பங்களாதேஷ் உனக்கு பகையா இருக்கானா ? உளவியலா உனக்கு ஏதோ சிக்கல் இருக்குல்ல அப்போ. நீ எதை கற்பிக்கிற ? உனக்கு அரசியல் லாபத்தை தவிர, ஆத்மார்த்தமா உணர்வு இருந்தா எப்படி ? பாகிஸ்தான், பங்களாதேஷ் நீ பெத்து போட்ட குழந்தை. பாகிஸ்தானும், நீயும் சேர்ந்து பிரசவம் பார்த்த குழந்தை பங்களாதேஷ். உலகத்துல எந்த நாடு வேணும்னாலும் பகை நாடாக இருக்கலாம்? இவன் எப்படி பகை நாடா ஆனான் ?
850 மீனவனை சுட்டுக்கொன்ற இலங்கை உனக்கு நட்பு நாடா இருக்கு. இலங்கைக்கும் இந்த நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா? ஆனால் பாகிஸ்தானும், பங்களாதேஷும் இந்த நாட்டு விடுதலைக்கு போராடி இருக்கான்ல. அவன போய் நீ எப்படி பகையாளி ஆக்குன ?
ஐபிஎல்லில் பிரிட்டிஷ் வீரர்கள் விளையாடுறாங்களா ? இல்லையா? ஆனால் பங்களாதேஷ், பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுறாங்களா? எப்படிப்பட்ட ஒரு அரசியல் முடிவு, கொள்கை முடிவு. காஷ்மீர்ல இருக்கிற முஸ்லீம் எல்லாம் இந்தியன் உள்ள வாங்க என சொல்லுவாங்க. இங்க இருக்க முஸ்லிம் எல்லாம் பாகிஸ்தானுக்கு போங்க என சொல்லுவாங்க. இது பைத்தியமா ? இல்லையா?
முத்தின பைத்தியம் யார்கிட்டயும் பிரச்சனை பண்ணாது. ஓரமா உட்காந்து தலையை சொறிஞ்சுகிட்டு அதுவா திரியும். அரை பைத்தியம் இருக்கு இல்ல, கடிச்சு வச்சுரும்…கொதறி விட்டுவிடும்.. கீறி விட்டுவிடும்…. இது பூரா அரை பைத்தியம் . இது எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது என தெரிவித்தார்.