கோதையாறு பகுதியிலுள்ள குட்டியாறு என்ற இடத்தில் விடப்பட்டுள்ள அரிசிக் கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அந்த யானை விடப்பட்ட இடத்தை விட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி வருகிறது.

வனப்பகுதியில் இருந்து உணவை யானை எடுத்துக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்து காணப்படுவதால் மருத்துவ சிகிச்சை வழங்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.