பிரியத்திற்கு உரிய குடும்ப உறுப்பினர் மூலைச் சாவு அடைந்த துயர நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து பிற உயிர்களை காப்பாற்றுவதற்கு முன் வருவது மகத்தான தியாகம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், தியாகத்தை போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதை உடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.