
நடிகர் விஜய் நேற்று தனது அரசியல் பயணத்தை அறிவித்தார். இதனையடுத்து தான் தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துக்கொண்டு சினிமாவைவிட்டு விலகி முழு அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இனி விஜய் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்ற செய்தியை சுட்டிக் குழந்தை ஒருவரிடம் தெரிவிக்க, உடனே ‘விஜய் வேணும், அவரை படம் நடிக்கச் சொல்லு’ என அந்தக் குழந்தை அழும் வீடியோ ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.