
அமெரிக்க நாட்டின் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் மக்கள் தொகை பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தரவுகள் குறிப்பிடப்படுவதாக “அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டில் வலுவான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இருந்தது. இதனால் அந்நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் சரக்கு மற்றும் சேவை துறை பற்றாக்குறை 948.1 பில்லியன் டாலராக இருந்தது.
அதே போல் பொருட்கள் மற்றும் சேவை பற்றாக்குறை அதிகரிப்பினால் பொருட்களின் பற்றாக்குறைவானது 9.3 சதவீதம் அதிகரித்ததால் 111.8 பில்லியன் டாலராக இருக்கின்றது. இது குறிப்பாக பணவீக்கத்தை பிரதிபலிக்கின்றது. இந்த பண வீக்கத்தை சமாளிப்பதற்காக பெடரல் ரிசர்வ் வங்கி, உலகளாவிய முக்கிய வங்கிகள் உள்ளிட்டவை வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. இதனால் நடக்கின்ற ஆண்டில் உலக வர்த்தக வளர்ச்சி குறைந்தே காணப்படும்” என கூறப்பட்டுள்ளது.