இந்தியாவில் அஞ்சல் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்காக செல்லும் மகள் சேமிப்பு திட்டம் உள்ள நிலையில் ஆண் குழந்தைகளுக்காகவும் பொன்மகன் என்ற சேமிப்பு திட்டம் உள்ளது. இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 10 வயது உட்பட்ட சிறுவனின் பெயரில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கணக்கு தொடங்கலாம் எனவும் குறைந்தபட்சம் 500 ரூபாய் செலுத்தி 15 வருடங்கள் வரை சேமிக்கலாம். இதில் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

தங்களின் மகனின் எதிர்காலத்துக்காக சேமிக்க விருப்பமுள்ள பெற்றோர்களுக்கு இந்த பொன்மகன் சேமிப்பு திட்டம் சிறந்த தேர்வாக அமையும் என கூறப்படுகிறது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் அடையாள அட்டை ஆகியவற்றை ஆவணமாக சமர்ப்பித்து இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். மேலும் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு உயர்கல்வி மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு கணக்கை முடித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.