பொதுவாகவே வீடுகளில் சிகப்பு நிற எறும்புகள் தொல்லை அதிகமாகவே இருக்கும். அதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் எப்படி விரட்டுவது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

படிகாரம் மற்றும் மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதனை பொடியாக்கி வீட்டில் இருப்பு இருக்கும் பகுதியில் தூவி விட வேண்டும்.

ஆரஞ்சு பல சாறு சிறிது எடுத்துக் கொண்டு அதனுடன் வெந்நீரை சேர்த்து எறும்பு இருக்கும் பகுதியில் தெளிக்கலாம். இதற்கு எலுமிச்சை பழத்தையும் பயன்படுத்தலாம்.

எறும்புக்கு பூண்டு வாசனை அறவே பிடிக்காது. அதனால் பூண்டு சாறை எறும்புகள் இருக்கும் இடத்தில் தெளித்தால் மாயமாக அவை மறைந்து விடும்.

வீடு துடைக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து துடைத்தால் இவை எறும்பு விரட்டியாக இருக்கும்.

வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்துக் கொண்டு அதனை எறும்பு இருக்கும் பகுதியில் தெளிக்கலாம்.