
இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் அடிக்கடி செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மொபைல் போன் வெடிக்கப் போகிறது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் மறைமுகமாக தெரிந்து கொள்ள முடியும். அதாவது உங்கள் மொபைல் போனிலிருந்து ஹிஸ்ஸ் என்ற சத்தம் அல்லது பாப்பிங் சத்தம், பிளாஸ்டிக் அல்லது கெமிக்கல் எரிகின்ற வாசனை உணர்ந்தால் உங்களது போன் வெடிக்கப் போகிறது என்று அர்த்தம். உங்களுடைய செல்போன் மிகவும் சேதம் அடைந்துள்ளது.
இது போன்ற நேரங்களில் மொபைல் ஃபோனை முகத்திற்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. உடனே போனை சார்ஜ் இல் இருந்து எடுத்து விட வேண்டும். உங்களது ஃபோனின் பேட்டரி உப்பு இருந்தாலும் அதனை தவிர்க்க வேண்டும். போனின் வடிவத்தில் ஏதாவது மாற்றம் இருந்தால் இந்த பிரச்சனை உள்ளது என்று நீங்கள் கண்டுபிடித்து விடலாம். எனவே முதலில் உங்களது பேட்டரிக்கு அதிக அழுத்தத்தை நீங்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலமாக மொபைல் போன் வெடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
மொபைல் போன் பேட்டரி உங்களது கைக்கு கிடைப்பதற்கு முன்பு பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றது. இருந்தாலும் சில யூனிட்டுகளில் போதுமான வசதி இல்லாததால் ஃபோன் பேட்டரியில் உள்ள சில தயாரிப்பு சிக்கலில் மூலமாக மொபைல் போன் அதிக வெப்பமாக கூடும். நீண்ட நேரம் மொபைல் போனுக்கு சார்ஜ் போடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சார்ஜ் போடுவதன் மூலம் விரைவில் வெப்பமாகி பிடித்து சிதறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்களது போன் 100 சதவீதம் சார்ஜ் ஏறும் வரை காத்திருக்காமல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏறியதும் நீங்கள் சார்ஜரை அகற்றி விடுவது நல்லது.