
மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சுற்றுலா அட்டை மூலமாக ஒரு நாளில் அளவற்ற பயணம் மேற்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களை மெட்ரோ நிர்வாகம் செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டு ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அதன்படி பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு வழங்கும் மையங்களில் 100 ரூபாய் செலுத்தி சுற்றுலா அட்டையை பெறலாம். இதனை பயன்படுத்தி அந்த ஒரு நாள் முழுவதும் மெட்ரோ ரயிலில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். சுற்றுலா அட்டையை பெரும்போது பயண கட்டணத்துடன் 50 ரூபாய் முன் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் அந்த அட்டையை பயணி திரும்ப ஒப்படைக்கும் போது வைப்பு தொகையான 50 ரூபாய் திரும்ப தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.