
இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI), மக்கள் தங்களின் ஆதாரின் தரவை தவறாக பயன்படுத்தாமல் இருக்க பல்வேறு வழிகளை வழங்குகிறது. அதை பின்பற்றுவதன் மூலம் உங்களது ஆதார் கார்டு பாதுகாப்பாக இருக்கும். இதற்கிடையில் விர்ச்சுவல் ஐடி என்பது ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட தற்காலிக, திரும்பப்பெறக்கூடிய 16 இலக்க ரேண்டம் எண் ஆகும். இ-கேஒய்சி சேவைகள் செய்யப்படும்போது ஆதார் எண்ணுக்குப் பதில் மெய்நிகர் ஐடியைப் பயன்படுத்தலாம். ஆதார் எண்ணை பயன்படுத்துவதை போல் விர்ச்சுவல் ஐடியை பயன்படுத்தி அங்கீகாரம் செய்யப்படலாம். ஆதார் எண்ணில் இருந்து ஆதார் விர்ச்சுவல் ஐடியை உருவாக்க முடியும். எனினும் ஆதார் விர்ச்சுவல் ஐடியிலிருந்து ஆதார் எண்ணை கண்டறிய இயலாது.
ஆதார் கார்டுதாரர்கள் அதிகாரப்பூர்வமான இணையதளம் (அ) MYAadhar போர்ட்டலிலிருந்து ஈஸியாக விர்ச்சுவல் ஐடியை பதிவிறக்கலாம். ஆதார் எண்ணை பகிர்வதற்கு பதில், ஆதாரின் தகவலை பாதுகாப்பாக வைத்திருக்க விர்ச்சுவல் ஐடியை பகிர்ந்துக்கொள்ளலாம். UIDAI ஒவ்வொரு அட்டைதாரருக்கும் ஆதார் பூட்டு சேவையினை அளிக்கிறது. இதன் வாயிலாக சேவை அட்டைதாரர் தங்களது பயோமெட்ரிக் விபரங்களை பூட்டித் திறக்கலாம். ஆதார் வைத்திருப்போர் அதனைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக பயோமெட்ரிக் விரங்களை ஓபன் செய்யவும்.
ஆதார் கார்டு விபரங்களை எவ்வாறு லாக் (அ) ஓபன் செய்வது..?
# UIDAIன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிட வேண்டும்.
# My Aadhar என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
# Aadhar Service தேர்ந்தெடுப்பதன் வாயிலாக உங்களது பயோமெட்ரிக்ஸை பாதுகாக்க வேண்டும்.
# இதற்கு பின் லாக்/அன்லாக் பயோமெட்ரிக்ஸ் என்பதை கிளிக் செய்வதன் வாயிலாக உங்களது ஆதார் விபரங்களை உள்ளிட்டு அடுத்த செயல் முறையை முடிக்க வேண்டும். இவ்வழியில் எளிதாக உங்களது ஆதாரை லாக்(அ)அன்லாக் செய்யலாம்