தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்கள் நேரில் வந்து புகார்களை மனுவாக அளித்து தீர்வு பெறும் முக்கிய அரசுத்திட்டமாக செயல்பட்டு வருகிறது.
ஜூலை 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகள் மற்றும் ஊரகங்களில் 45 சேவைகள் வழங்கப்பட்டு, 10,000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டதாக அரசு தகவல் வெளியிட்டிருந்தது. இந்த மனுக்களில் அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு வழங்கப்படும் என்றும் அரசு உறுதி அளித்திருந்தது.
இந்த சூழ்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட மனுக்கள் கட்டுகளாக நீரில் மிதந்து வந்ததைக் கண்ட பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் வழங்கினர்.
அதன்பேரில் போலீசார் அவற்றை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கீழடி, கொந்தகை, நெல்முடிகரை, மடப்புரம் போன்ற பகுதிகளில் நடந்த முகாம்களிலிருந்து பெறப்பட்ட மனுக்களாகவே அவை இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் தற்போது அ.தி.மு.க.வின் கடுமையான கண்டனத்திற்கும் காரணமாகியுள்ளது. கட்சியின் சமூக வலைதள பக்கத்தில், “பொதுமக்கள் அளித்த மனுக்களை தூக்கி எறிந்த திமுக அரசை 2026 தேர்தலில் பொதுமக்கள் தூக்கி எறிவார்கள்.” என்ற கடுமையான விமர்சனம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
பொதுமக்கள் அளித்த மனுக்களை தூக்கி எறிந்த திமுக அரசை 2026 தேர்தலில் பொதுமக்கள் தூக்கி எறிவார்கள். pic.twitter.com/x3MPpk93fk
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) August 29, 2025
“>
