இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு டிசம்பர் 31ஆம் தேதி வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை சமர்ப்பித்திருந்தால் உடனடியாக திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு என்று தனியாக லாக்கர்கள் ஒதுக்கப்படும் போது வங்கிகள் வாடிக்கையாளர்களுடன் முத்தரையிட்ட காகிதத்தில் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.

இதன் மூலம் லாக்கர்களில் வைக்கப்படும் பொருள் சேதமடைந்தால் அல்லது திருடப்பட்டால் வங்கி தான் பொறுப்பு என்று ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் அசல் சான்றிதழ் வங்கியில் வைக்கப்படும் நிலையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு வங்கியில் ஒப்படைத்து இருந்தால் லாக்கர் ஒப்பந்தத்தை பெற்ற திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது