
இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கி மத்திய அரசு உதவுகிறது. அதாவது புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் ரூ. 10 லட்சம் வரை கடன் பெற்று பயன் பெறலாம். இந்த திட்டத்தில் கடன் பெறுவதற்கு நேரடியாக வங்கிகளுக்கு சென்று சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான udayamimithra.in என்ற முகவரிக்குள் சென்றும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, சிலிண்டர் பில், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினராக இருந்தால் அதற்குரிய சாதி சான்றிதழ், கடனுக்கான 6 மாத வங்கி அறிக்கை, வருமான சான்றிதழ் மற்றும் வணிக முகவரியையும் வணிகம் தொடர்பான ஆவணத்தையும் வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் நிலையான வட்டி விகிதம் கிடையாது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வட்டி தொகை 12 சதவீதமாகும். மேலும் இந்த திட்டத்தில் இருந்து நீங்கள் பெரும் கடன் தொகையை வணிக நோக்கங்களுக்கு ஆக மட்டுமே பயன்படுத்த வேண்டும். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை கடன் பெற்று பயன்பெறலாம்.