இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவாவில் தொடர்ந்து 6 மாத காலமாக ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் வைத்திருந்த 80,000 பேரின் கார்டுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்னும் எத்தனையோ ஏழை, எளிய மக்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்களின் கார்டை ரத்து செய்த அதற்கு பதிலாக அவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக ரேஷன் கடைகளில் தொடர்ந்து பொருட்கள் வாங்காமல் இருப்பவர்கள் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்களுடைய ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு விட்டால் அதன் பிறகு எந்த ஒரு அடையாள ஆவணத்திற்கும் ரேஷன் அட்டையை பயன்படுத்த முடியாது. மேலும் ஒரு வேளை நீங்கள் ரேஷன் கார்டை பயன்படுத்தாவிட்டில் அதை அரசிடம் சமர்ப்பித்து விடலாம்.