பாகிஸ்தான் ராணுவம் தனது சொந்த நாட்டு வீரர்களையே “இவர்கள் எங்களுடைய வீரர்கள் இல்லை” எனக்கூறி கைவிட்டிருப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் பலூச் விடுதலைப் போராட்டக் குழுவினர், அந்த நாட்டு ராணுவ வீரர்கள் சிலரைச் சமீபத்தில் சிறைபிடித்துச் சென்றனர்.
ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்திடம் கேட்டபோது, கடத்தப்பட்டவர்கள் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்தவர்களே இல்லை என மிகச் சாதாரணமாகக் கைவிரித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிணைக்கைதிகள், தாங்கள் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதற்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளைக் கேமராவிற்கு முன்பாகக் காட்டி கதறி அழுதுள்ளனர்.
“நாங்கள் உங்களுக்காகத் தானே பணியாற்றினோம்? இப்போது எங்களை இப்படி அநாதையாக விடுவதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது?” என உருக்கமாகக் கேள்வி எழுப்பிய வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
போராட்டக் குழுவினரின் பிடியில் உயிருக்குத் துடிக்கும் தங்களை மீட்கத் துணிவில்லாமல், ராணுவம் இப்படிப் பொய் சொல்வது அந்த நாட்டு வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
