நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் இந்த போரில் ரஷ்யாவை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு உக்கிரனுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து எங்கள் படைகளை வெளியேற்ற உக்ரைன் ராணுவம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு  கொடுத்த வெடிகுண்டுகள், பீரங்கிகள், ஏவுகணைகள் போன்றவற்றால் எந்த பலனும் இல்லை என ரஷ்யா அதிபர் புதின்  தெரிவித்துள்ளார்