ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.‌ அதன் பிறகு நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் சுயேச்சைகள் பலரும் ஈரோடு கிழக்கில் போட்டியிடுகிறார்கள். ஈரோடு கிழக்கில் திமுக, தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் தரப்பு பிரச்சாரத்தில் குதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்தது.

ஓ. பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதியில் நானும் போய் கண்டிப்பாக அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம். ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் அங்க போனா நமக்கு தான் அசிங்கம். நம்மள யாரும் வெத்தல பாக்கு வச்சு அழைக்கவில்லை. அதனால் அங்கு போக வேண்டாம் என கூறுகிறார்களாம். ஆனால் மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமியோ நம்மளே பார்த்துக் கொள்ளலாம் என களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்ட நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.