
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுவார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தேமுதிக அமமுகவை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.