அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தல் கூட்டணிக்காக ஒவ்வொரு கட்சியையும் தேடிச் சென்றது வழக்கத்திற்கு மாறானது தான். ஏனென்றால் எங்கள் கட்சியிலிருந்து ஒரு சின்ன குழுவாக இருக்கின்ற திரு ஓபிஎஸ் அவர்கள் எல்லா கட்சிக்கும் ஆதரவு கேட்கிறார்.

ஓபிஎஸ் மீது பயம் இல்லை. ஓபிஎஸ் ஒரு நகர்தலை செய்கிறார். நாங்களும் இன்னொரு நகர்தலை செய்கிறோம். ஜி.கே வாசன் அலுவலகத்துக்கு போனோம் என்று சொன்னால், ஈரோடு கிழக்கில் கடந்த பொதுத்தேர்தலில் அவங்க தான் வேட்பாளர். யுவராஜ் தான் வேட்பாளர். ஆகவே அவர் உரிமை கோருகிறார்.  நாங்கள் தாமாக நிற்கிறோம் என்று உரிமை கோருகின்றார்.

தாமாக சார்பில் பொதுவெளியில் வெளிப்படுத்தவில்லை. அவர்களுக்கு உரிமை இருக்கிறது அல்லவா ? காங்கிரஸ் கட்சிக்கு எதிர்த் தரப்பில் கொடுத்துட்டாங்க. அதே மாதிரி தாமாக போட்டி இடுவதற்கு விரும்பலாம். இந்த நேரத்துல… இந்த சோதனையான நேரத்தில் எங்களை அடையாளப்படுத்துவதற்கு ஒரு களம் தேவை.

அந்த களத்தில் நின்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அண்ணன் எடப்பாடி யார் தலைமையில் இயங்குகின்ற இந்த இயக்கத்திற்கு ஒரு பெரிய ஆதரவு இருக்கிறது. இத்தனை சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் இந்த இடத்தை பிடித்திருக்கிறோம் என்பதை,  நாங்கள் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.