ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் அமெரிக்கா தனது 3 முக்கிய ஜங்கி யுத்தக் கப்பல்களை திடீரென பின்வாங்கச் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் குறிப்பாக ஈரானை வளைத்துப் பிடிக்க ஓமன் வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு’ என்ற பிரம்மாண்ட போர்க்கப்பல், தீ விபத்தால் சேதமடைந்ததை அடுத்து பழுதுபார்ப்பதற்காகத் தளம் திரும்பியுள்ளது.
அதேபோல் கடலுக்கடியில் இருக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இருந்த மேலும் 2 கப்பல்களும் திடீரென மலேசியாவை நோக்கித் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஈரான் உடனான இந்தப் போரில் அமெரிக்கா தேவையில்லாமல் சிக்கிக்கொண்டுவிட்டதாகவும், தரைப்படை இல்லாமல் ஈரானை வீழ்த்துவது ட்ரம்ப் அரசுக்குச் சவாலாக இருக்கும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இந்தத் திடீர் பின்வாங்கல், போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறியா அல்லது அடுத்தகட்ட பெரிய தாக்குதலுக்கான திட்டமா என உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
