அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, உலகப் பொருளாதாரத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க கடற்படையின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது என்றும், ஈரானின் 159 போர்க்கப்பல்களும் தற்போது கடலுக்கு அடியில் (மூழ்கடிக்கப்பட்டு) இருப்பதாகவும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடற்பரப்பில் கண்ணிவெடிகளைப் புதைக்கும் ஈரானின் சிறிய படகுகளைக் கண்டால் தயவுதாட்சண்யமின்றி சுட்டுத் தள்ளுமாறு அமெரிக்கப் படைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தனக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், ஆனால் ஈரானுக்கான கால அவகாசம் மிகக் குறைவாகவே இருப்பதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் தலைவர்கள் யார் என்பதில் அந்நாட்டுக்குள்ளேயே குழப்பம் நிலவி வருவதாகவும், ஒரு சரியான உடன்பாடு எட்டப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
