ஈராக்கில் உள்ள கிர்குக் நகரில் வெவ்ரின மக்கள் வசித்து வரும் நிலையில் குர்திஷ் துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டும் கண்ணாடிகளை எறிந்தும் கற்களை வீசியும் இவர்கள் மோதிக்கொண்ட நிலையில் இது பயங்கர கலவரமாக உருவெடுத்துள்ளது. இதனால் வாகனங்களுக்கும் தீ வைத்து சேதப்படுத்தியுள்ளனர் இது குறித்த தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று வன்முறையை அடக்கினார். ஆனாலும் இந்த மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குர்திஷ் இனத்தை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் இன மோதல் ஏற்படாமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.