செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள அணு உலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் 500 மெகாவாத் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகின்றது. திரவ சோடியத்தை குளிர்விப்பானாகவும் ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இந்த தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதால் உலக நாடுகளில் இதனை கைவிட்டு விட்டன. இதனால் வட தமிழக மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவித்து வருகிறார்கள்.