ஊபர், ஓலா, ராபிடோ போன்ற தனியார் செயலிகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரண்டு தரப்பினரும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் டாக்ஸி செயலிகளை உருவாக்குவதற்கு கோரிக்கை வைத்த நிலையில் TATO என்ற புதிய செயலி தனியாரால் உருவாக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக மக்களுக்கு முறையான கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.