இந்தியாவில் தடையை மீறி இ சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். சமீபகாலமாக நாட்டில் இ சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருவதால்இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இ சிகரெட் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் www.violation-reporting.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இ-சிகரெட் கடந்த 2019 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.