இந்தியாவில் மக்கள் பலரும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை விரும்புகிறார்கள். அரசு நுகர்வோர் நலன்களை பாதுகாப்பதற்கு தற்போது சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இ-காமர்ஸ் தளங்களில் ஏமாற்றும் dark pattern முறைக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோரின் நலனை பாதுகாப்பதற்காக வாடிக்கையாளர்களை ஏமாற்ற அல்லது அவர்களின் விருப்பங்களை கையாளும் நோக்கத்துடன் இந்த முறை பயன்படுத்தப்படுவதால் அரசை இதனை தடை செய்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பு இந்தியாவில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் அனைத்து தளங்களுக்கும், விளம்பரதாரர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பொருந்தும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவை கடைபிடிக்காமல் இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.