இஸ்ரேல் மீது ஈரான் மிகக் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பல முக்கிய இடங்களை இலக்கு வைத்து மொத்தம் 12 பகுதிகளில் ஈரான் ‘கிளஸ்டர் ஏவுகணைகளை’ (Cluster Rockets) வீசித் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கரத் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் ஒரு கிண்டர் கார்டன் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் போர் பதற்றம் எகிறியுள்ளது. ஈரானின் இந்தத் திடீர் ஏவுகணை மழைக்கு இஸ்ரேல் ராணுவம் திருப்பித் தாக்குதல் நடத்துமா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சர்வதேச அளவில் இந்தத் தாக்குதல் பெரும் கவலையையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
