இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஈரான், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் பணக்காரருக்கு சொந்தமான கப்பலை ஏமன் ஹவுத்தி கிளர்ச்சி படையினர் கடத்தியுள்ளனர். அந்தக் கப்பலில் இருந்த 25 பேரும் தற்போது ஹவுத்தி படையினரிடம் பணைய கைதிகளாக உள்ளனர்.

இது தொடர்பாக ஹவுத்தி படை கூறுகையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய காரணத்தினால் தான் அந்தக் கப்பலை சிறை பிடித்து இருப்பதாகவும் போர் நிறுத்தப்படும் வரை கடல் பகுதியில் வரும் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைப்போம் என்றும் எச்சரித்துள்ளது.

அதேபோன்று ஹவுத்தி செய்தி தொடர்பாளர் முகமது அப்துல் சலாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அடக்குமுறை தான் இஸ்ரேலியர்களுக்கு புரியும் இஸ்ரேலிய கப்பலை நாங்கள் பணையமாக பிடித்து வைத்திருப்பது எங்களை போரில் இணைத்துக் கொண்டதன் தீவிரத்தை உணர்த்தும். கடல் பரப்பில் என்ன விலை கொடுத்தாவது இந்த போரை நாங்கள் மேற்கொள்வோம். இது ஆரம்பம்தான்” என குறிப்பிடப்பட்டுள்ளது.