ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலை கடத்தி அதில் பயணம் செய்த 25 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இஸ்ரேலிய பணக்காரர் ஒருவருக்கு சொந்தமான கப்பலை ஹவுத்தி படை சிறை பிடித்துள்ளது. ஆனால் அதில் பயணம் செய்த ஒருவர் கூட இஸ்ரேலியர்கள் கிடையாது. அவர்கள் மெக்சிகோ, பல்கேரியா, உக்ரைன், பிலிப்பைன்ஸ் எனப் பல நாடுகளை சேர்ந்தவர்கள்.

இதனால் பல நாடுகளை சேர்ந்தவர்கள் இருக்கும் கப்பலை கடத்தியதன் மூலம் ஹவுதி சர்வதேச குற்றம் புரிந்து உலக நாடுகளின் கோபத்துக்கு இலக்காகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.