பிரபலமான யூடியூபர் கீப்ரி டார்னெல் டெய்லர். இவருடைய காதலி நாடயா மேய்ஸ்‌. இதில் கீப்ரி சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில் youtube-ல் 2.6 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இந்நிலையில் கீப்ரி தன்னுடைய காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் தன்னுடைய காதலியை மிகவும் கொடூரமாக அடித்து தாக்குகிறார்.

 

 

ஒரு பெண் அவரிடம் இருந்து நடாயாவை காப்பாற்ற முயலும் நிலையிலும் அவர் விடாமல் அந்த பெண்ணை கொடூரமாக மிருகத்தனமாக அடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு உடனடியாக அவருடைய youtube சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.