புது தில்லி: ரேபிடோ ஓட்டுநரை கேலி செய்து, உடல் அவமானப்படுத்திய வீடியோவை வெளியிட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளான பெண், தற்போது இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீபத்தில், ஓட்டுநர் பெரும்பாலான இருக்கையை ஆக்கிரமித்து, பெரிய பையை எடுத்துச் சென்றதால் வசதியாக அமர இடமில்லை என கூறி ரேபிடோ பயணத்தை ரத்து செய்தார். பின்னர், ஓட்டுநரின் காட்சிகளை ரகசியமாக பதிவு செய்து வெளியிட்ட வீடியோவில் உடல் அவமானப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தியதால், சமூக ஊடகங்களில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, அந்தப் பெண் புதிய வீடியோவை வெளியிட்டு, “என் சகோதரனை (ரேபிடோ ஓட்டுநர்) அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் கடினமாக உழைக்கிறார்; அதைப் போலவே என் பணமும் கடின உழைப்பில் இருந்து வந்தது, அது மரத்திலிருந்து இலவசமாக விழுவதில்லை. நான் ரேபிடோ ஆர்டர் செய்தால், அதில் வசதியைத் தேடுவேன். ஆம், கடைசியில் சொன்ன கருத்து தவறானது, அதற்காக ரேபிடோ பையா ஜிக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
‘भाई मेरा भी पैसा हार्ड वर्क का है..’
दिल्ली :रैपिडो ड्राइवर का मज़ाक उड़ाने और बॉडी-शेमिंग करने वाली महिला ने इंस्टाग्राम पर सफाई दी#Delhi #Rapido pic.twitter.com/cNaUZyoye2
— NDTV India (@ndtvindia) August 8, 2025
“>
மேலும், தனது மீது விமர்சனங்களை வெளியிட்ட சமூக ஊடகப் பிரபலர்களையும் அவர் குற்றம்சாட்டினார். “என்னுடைய வீடியோவை எடுத்து தவறான முறையில் வைரலாக்கினர். மக்கள் வந்து நான் தவறு செய்ததாக சொல்கிறார்கள்; ஆனால் நீங்களும் அதேபோன்ற செயல்களில் ஈடுபட்டால், உங்களுக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லை.
நீங்கள் என்னைத் தவறாக அழைத்தால், உங்களை நீங்களே சரி என்று சொல்ல முடியாது” என தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
