இந்தியாவில் மக்கள் பலரும் பான் கார்டை நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான பல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைக்க அரசு தொடர்ந்து கால அவகாசம் வழங்கியது. அந்த கால அவகாசம் தற்போது முடிந்து விட்டது.

இந்திய வருமான வரி சட்டத்தின்படி குடியுரிமை இல்லாதவர்கள் அல்லது இந்திய குடியுரிமை இல்லாதவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் பான் கார்டை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. அதனைப் போலவே வங்கி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது. அரசின் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.