தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது வரை ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெற 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் பெறுவோர், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோர், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அரசிடமிருந்து பென்ஷன் பெறுவோர் மற்றும் 3000 யூனிட்டிற்கும் மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.