ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை முன்நின்று வழிநடத்தி வரும் 31 வயது வீரர் ஸ்ரேயஸ் ஐயர், தனது அபாரமான கேப்டன்சி மற்றும் பேட்டிங் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இருப்பினும், இந்திய டி20 அணியில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.
ஐபிஎல் 2026-ன் முதல் சில வாரங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புள்ளிப்பட்டியல் தலைகீழாக மாறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற ஜாம்பவான் அணிகள் பட்டியலின் கடைசி இடங்களில் தள்ளப்பட்டுள்ளன. அதே சமயம், கடந்த சீசனில் ரன்னர்-அப் ஆக வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்புத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் 4 வெற்றிகளுடன் 9 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான ஆர்சிபி அணி 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
SHREYAS IYER….. YOU ABSOLUTELY FREAK. 🤯
– The reaction of Rohit and Surya and an ice cold Celebration by Sarpanch Saab. 🥶 pic.twitter.com/dMOYLL7Phl
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 16, 2026
ஐயரின் கேப்டன்சி ஒருபுறம் மிரட்டினாலும், அவரது பேட்டிங் திறமை பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 203 ரன்களைக் குவித்துள்ளார். அவரது கடைசி மூன்று இன்னிங்ஸ்கள்: 50, 69, 66.* * குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 66 ரன்கள் விளாசி, 21 பந்துகள் மீதமிருக்க அணியை வெற்றி பெறச் செய்தார்.
Good Captaincy, Good Batting, Great fielding- Shreyas Iyer does all but still gets ignored by selectors 🥲 pic.twitter.com/KJ11Ipbji4
— Rajabets 🇮🇳👑 (@rajabetsindia) April 17, 2026
முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐயரைப் புகழும்போது, “ஸ்ரேயஸ் தொடுவதெல்லாம் பொன்னாகிறது (Midas touch). அவர் விளையாடுவது மட்டுமல்லாமல், எதிர்முனையில் இருக்கும் வீரரையும் சிறப்பாக விளையாட வைக்கிறார்,” என்று தெரிவித்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி, பீல்டிங்கிலும் அதிரடி காட்டி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா அடித்த பந்தை, பவுண்டரி கோட்டின் அருகே அந்தரத்தில் எகிறிப் பிடித்து, பின்னர் உள்ளே வீசி தனது சக வீரர் சேவியர் பார்ட்லெட் கையில் தஞ்சம் அடையச் செய்தார்.
-An impossible catch
-Dangerous power hitting
-Great captaincyShreyas Iyer can do everything except impressing the selectors pic.twitter.com/OkTEJhtRLx
— Sagar (@sagarcasm) April 16, 2026
இந்த ‘அக்ரோபாட்டிக்’ கேட்சைக் கண்டு ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் ஸ்தம்பித்துப் போயினர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், “நான் நேரில் பார்த்த சிறந்த கேட்சுகளில் இதுவும் ஒன்று” என எக்ஸ் (X) தளத்தில் பாராட்டியுள்ளார். கடந்த 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைகளை வென்ற இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர் இடம் பெறவில்லை. 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 175.07) குவித்தும் அவருக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது எனப் பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர் நெஸ் வாடியா கேள்வி எழுப்பியுள்ளார். “ஸ்ரேயஸ் ஐயரை டி20 அணியில் சேர்க்காததற்கு ஒரு காரணமாவது யாராவது சொல்ல முடியுமா?” என அவர் ஆவேசமாக வினவியுள்ளார்.
மேலும் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இவரை “ரோல்ஸ் ராய்ஸ்” (Rolls Royce) என்று வர்ணித்துள்ள நிலையில், தற்போதைய அபாரமான ஃபார்ம் அவரை மீண்டும் இந்திய டி20 அணிக்குள் கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
