குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில், கொல்கத்தா வீரர் கேமரூன் கிரீன் விளாசிய சிக்ஸர் ஒன்று மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மோதியது. இதன் விளைவாக, ஐபிஎல் விதிகளின்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதிக்காக ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்கப்படவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 25-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் குவித்தது.
ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய கொல்கத்தா அணியை, அந்த அணியின் விலையுயர்ந்த வீரரான கேமரூன் கிரீன் சரிவிலிருந்து மீட்டார். அன்குல் ராயுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்த கிரீன், இறுதிவரை அதிரடி காட்டி 79 ரன்கள் குவித்தார். இதுவரை சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்த கிரீன், முக்கியமான கட்டத்தில் தனது ஃபார்முக்கு திரும்பியுள்ளது கொல்கத்தா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
𝙂𝙧𝙚𝙚𝙣 𝙨𝙬𝙞𝙣𝙜𝙨, 𝙘𝙖𝙧 𝙨𝙪𝙛𝙛𝙚𝙧𝙨 💥 🚗#CameronGreen connects, clears the ropes, & sends it crashing onto the car for a MAXIMUM! 🤯#TATAIPL | #IPLRivalryWeek 2026 ➡️ #GTvKKR | LIVE NOW 👉https://t.co/jRYOdM0YaS pic.twitter.com/pt2NYUGhQr
— Star Sports (@StarSportsIndia) April 17, 2026
ஆட்டத்தின் 13-வது ஓவரை அசோக் சர்மா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட கேமரூன் கிரீன், அதனை லெக் சைடு திசையில் இமாலய சிக்ஸராக மாற்றினார். அந்தப் பந்து நேராகச் சென்று ஸ்டேடியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காரின் ஜன்னல் பகுதியில் பலமாக மோதியது. இதில் காரின் கதவில் சிறிய பள்ளம் (Dent) விழுந்தது.
ஐபிஎல் தொடரின் விதிகளின்படி, ஒரு வீரர் அடிக்கும் பந்து மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஸ்பான்சர் காரின் மீது மோதினால், அந்தத் தொடரின் ஸ்பான்சர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளுக்காக ரூ. 5 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்க வேண்டும். கிரீனின் இந்த ஒற்றை சிக்ஸர் மூலம் தற்போது இந்தத் தொகை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
