தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு அடுத்த வாரம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மருத்துவ படிப்பில் மத்திய அரசின் பொது கலந்தாய்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தமிழகத்தில் கடந்த ஆண்டு போலவே நிகழ்வாண்டிலும் கலந்தாய்வு நடைபெறும்.

இந்த கலந்தாய்வின்போது காலதாமதம் ஏற்படாமல் தவிர்க்க அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதத்திற்கும் மாநில ஒதுக்கீடு 85 சதவீதத்திற்கும் ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு களுக்கான விண்ணப்ப பதிவு பணிகளை அடுத்த வாரம் தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.