இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்தக்கூடிய காற்று மாசுபாட்டை கண்டறியும் கருவியை தற்போது சென்னை ஐஐடி ஆராய்ச்சி குழு வடிவமைத்துள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு சில தொலைவில் கூட சாட்டின் தரம் மாறக்கூடும். அதனால் காற்றின் தரத்தை ஒரே இடத்தில் இருந்து கண்காணிப்பது சாத்தியமில்லாதது. இதனால் வாகனங்களில் பொருத்தும் வகையில் காற்று மாசுபாட்டை கண்டறியும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் காற்றின் தரத்தை கண்டறிதல் மற்றும் காற்றின் தரம் குறித்து மக்களிடையே எடுத்துரைத்தல் உள்ளிட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இரு சக்கர வாகனம் உள்ளிட்டு அனைத்து வாகனங்களிலும் பொருத்திக் கொள்ள முடியும். இது காற்றின் தளத்தை அளவீடு செய்வது மட்டுமல்லாமல் வாயுக்கள் அளவையும் சாலைகளின் தடிமன் போன்றவற்றை சோதனை செய்யும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.