
காட்டின் ராஜா சிங்கம் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். எந்த ஒரு மிருகத்தையும் வேட்டையாடும் வலிமை கொண்டது சிங்கம். அப்படிப்பட்ட சிங்கம் ஒரு மரத்தில் இருந்து இலைகளை சாப்பிடும் காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து இது உண்மையில் சிங்கமா? அல்லது எடிட் செய்யப்பட்ட வீடியோவா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது எப்போது, எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், இது ஒரு சைவ சிங்கம் என்று வேடிக்கையான கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.
View this post on Instagram