தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்(NFSA) கீழ் டிசம்பர் 2023 வரை இலவச ரேஷன் விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) என பெயரிட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஜனவரி 1, 2023 முதல் NFSA பயனர்களுக்கு இலவச ரேஷன் விநியோகத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் சமீபத்திய புதுப்பிப்பின் படி ஏழை மக்களுக்கு டிசம்பர் 2023 வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்.

மேலும் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் யாரும் பசியுடன் படுக்கைக்கு செல்லக் கூடாது என்பதற்காக கொரோனா தொற்று நோயின் பேரழிவின்போது மையம் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) தொடங்கப்பட்டது. இவற்றில் ஏழை, எளியோருக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இத்திட்டத்தின் கீழ் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பயனளிக்கப்படுகிறது. அதே சமயத்தில் வரும் லோக்சபா தேர்தல் 2024 வரை PMGKAYஐ அரசாங்கம் தொடரலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர்.