
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகி தவிப்பில் இருக்கிறார்கள். இந்நிலையில் வெள்ளம் காரணமாக பலர் தங்கள் ஆவணங்களை இழந்திருக்கலாம். இதன் காரணமாக தற்போது புயல் காரணமாக மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி அரசு தேர்வுகள் துறையில் விண்ணப்பித்து இலவசமாக இந்த மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான சிறப்பு முகாம்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் போது விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பித்தும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.