ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஆதியூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ராஜாமணி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தன்னுடைய 100-வது பிறந்த நாளை 52 பேரன் பேத்திகளுடன் சிறப்பான முறையில் கொண்டாடினார். அதாவது மூதாட்டிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில், இவர்கள் மூலம் பேரன், கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தி என மொத்தம் 52 பேரன், பேத்திகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் 50 வயது வரை வாழ்வதே அரிதாக உள்ள இந்த காலகட்டத்தில் 100 வயது வரை ராஜாமணி ஆரோக்கியமுடன் வாழ்வதோடு, 5-வது தலைமுறையையும் பார்த்து விட்டார். மேலும் இது இறைவன் கொடுத்த வரம். நான் 52 பேரன் பேத்திகளை பார்த்து விட்டேன். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்று ராஜாமணி கூறினார்.