எதிர்பாராத விதமாக பெற்றோர் இறந்துவிடும் சமயத்தில் தங்களுடைய சொத்துக்கள் குறித்த விவரங்களை பிள்ளைகளிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் இருப்பது பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு சொத்துக்கள் சென்றடையாமல் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. கோவாவின் பர்தேஷ் தாலுகாவில் இருக்கும் மப்ஷா என்ற இடத்தில் வசித்து வந்த ஜார்ஜ் என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் உடல் நல குறைவால் இறந்துவிட்டார்.

மகன்கள் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் ஜார்ஜ் வீடு பூட்டி கிடந்துள்ளது. இந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தந்தையின் சொத்துக்களை விற்பனை செய்வதற்காக மகன்கள் வெளிநாட்டில் இருந்து கோவாவிற்கு வந்துள்ளனர். அப்போது தன்னுடைய தந்தை வாழ்ந்த வீட்டை திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தபோது வங்கி லாக்கர் சாவிகளும் சில ஆவணங்களும் இருந்துள்ளது. பிறகு சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று நடைமுறைகளை முடித்து மூன்று லாக்கரையும் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கட்டு கட்டாக மூன்று கோடி ரூபாய் மதிப்பில் பணம் இருந்தது.

ஆனால் அவை அனைத்துமே காலாவதியான ரூபாய் நோட்டுகள். அதாவது அந்த நோட்டுகள் அனைத்தும் இந்திய அரசால் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டதால் மகன்கள் அந்த பணத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சில லட்சம் மதிப்பில் இருந்த நகைகளை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொண்டனர். தற்போது ஜார்ஜ் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் எதுவும் மகன்களுக்கு பயன்பட முடியாமல் போய்விட்டது. அதேசமயம் தந்த இவ்வளவு பணத்தை சேமித்து வைத்திருப்பதே எங்களுக்கு தெரியாது என்றும் மகன்கள் கூறியுள்ளனர்.